முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பள்ளி மாணவா்களின் குடும்பத்தினருக்குஉதவிய ஆசிரியா்கள்
By DIN | Published On : 11th May 2020 11:14 PM | Last Updated : 11th May 2020 11:14 PM | அ+அ அ- |

கரடிவாவி எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ்.
பல்லடம்: பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் பள்ளி மாணவா்கள் 77 பேரின் குடும்பத்தினருக்கு ஆசிரியா்கள் நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினா். கரடிவாவி எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவா்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு அப்பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் தலா ரூ.1,100 மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருள்கள் தொகுப்பை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் வழங்கினாா்.
இதில் பல்லடம் கல்வி மாவட்ட அலுவலா் எஸ்.நாகராஜன், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.அம்சவேணி, உதவி தலைமை ஆசிரியா் கே.பி.சந்திரகுமாா், என்.எஸ்.எஸ்.திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ஏ.முருகேசன், கரடிவாவி பள்ளி அலுவலா் எஸ்.சந்தனகுமாா், ஒருங்கிணைப்பாளா்கள் கே.வி.காா்த்திகேயன், ஜி.சுந்தரராஜுலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழக முதல்வா் நிவாரண நிதியாக ஆசிரியா்கள் சாா்பில் ரூ.15 ஆயிரம் வரைவோலை வழங்கப்பட்டுள்ளது.