திருப்பூரில் இருந்து 2ஆம் கட்டமாக பிகாருக்கு சிறப்பு ரயில்: 1,400 தொழிலாளர்கள் இன்று அனுப்பிவைப்பு

திருப்பூரில் இருந்து பிகார் மாநிலம் ஹஜிபூருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
திருப்பூரில் இருந்து 2ஆம் கட்டமாக பிகாருக்கு சிறப்பு ரயில்: 1,400 தொழிலாளர்கள் இன்று அனுப்பிவைப்பு

திருப்பூரில் இருந்து பிகார் மாநிலம் ஹஜிபூருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த 1,400 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திருப்பூரில் சிக்கித் தவித்து வருகின்றனர். 

கரோனா பொதுமுடக்கத்தால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் குறித்து வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூரில் இருந்து பிகார் மாநிலம் ஹஜிபூருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதில், 1,400 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். திருப்பூரில் இருந்து ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,094 தொழிலாளர்கள் உள்பட 1,140 பேர் சிறப்பு ரயில் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com