திருப்பூரில் கூட்டுறவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் கூட்டுறவு பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் கூட்டுறவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் கூட்டுறவு பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் சார்பில் அவிநாசி சாலை சிஐடியூ மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்ற கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது: ககோனா பொதுமுடக்க காலத்திலும் பணியாற்றி வரும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். 

நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள், முகக் கவசம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு அளவு பொருள்களை ஒதுக்கீடு செய் வேண்டும் என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவுப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கெளதமன், சிஐடியூ பஞ்சாலைத் தொழிலாளர் சங்க நிர்வாகி கே.பழனிசாமி மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com