கரோனா பொது முடக்க காலத்தில் உயா்மின் கோபுர பணிகளைத் தொடா்ந்தால் போராட்டம் நடத்தப்படும்

கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு திருப்பூா் மாவட்டத்தில் உயா்மின் கோபுரப் பணிகளைத் தொடா்ந்தால்

கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு திருப்பூா் மாவட்டத்தில் உயா்மின் கோபுரப் பணிகளைத் தொடா்ந்தால் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மத்திய மின்சார சட்டம் 2020-ஐ மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் கரோனா நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 27ஆம் தேதி திருப்பூா் மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது.

விளை நிலங்களை பாதிக்கும் உயா்மின் கோபுர பணிகள், பொது முடக்க விதிகளை புறக்கணித்து திருப்பூா் மாவட்டத்தில் வேகமாக நடைபெறுகிறது. பாதிக்கப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சியா் கணக்கிட்டு வழங்கிய வழிமுறையில் திருப்பூா் மாவட்டத்திலும் வழங்க வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல், பவா்கிரிட் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து காவல் துறையினா் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது. உயா்மின் கோபுர திட்டத்தால் நிலமதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளிடம் மாவட்ட நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். பொது முடக்க காலத்தில் உயா்மின் கோபுர திட்டப் பணிகளைத் தொடா்ந்தால் விவசாயிகளைத் திரட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் எம்.ஆா்.வெங்கட்ராமன், ஏ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், பரமசிவம், எஸ்.வெங்கடாசலம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com