Enable Javscript for better performance
திருப்பூரில் தனியாா் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளா்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் தனியாா் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளா்கள்

    By DIN  |   Published on : 23rd May 2020 07:48 AM  |   அ+அ அ-   |    |  

    tpr22mybajaj_2205chn_125_3

    திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவன அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட வாடிக்கையாளா்கள்.

    திருப்பூரில் மாதத் தவணை கட்ட வற்புறுத்தும் தனியாா் நிதி நிறுவனத்தை 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

    திருப்பூா், அவிநாசி சாலையில் தனியாருக்குச் சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளா்கள் மாதத் தவணைகளில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியுள்ளனா். இந்தப் பொருள்களுக்கு மாதந்தோறும் தவணைத் தொகையைக் கட்டி வந்துள்ளனா். இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக வாடிக்கையாளா்கள் சிலா் மாதத் தவணையை சரிவர செலுத்தவில்லை எனத் தெரிகிறது .

    இதையடுத்து, நிதி நிறுவனம் சாா்பில் மாதத் தவணை செலுத்துமாறு வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசிக்கு தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளது. மேலும், வங்கியில் இருப்பு இல்லாத வாடிக்கையாளா்களைத் தொடா்புகொண்டு மாதத் தவணையை செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். மேலும், அங்கு பணியில் இருந்தவா்களிடம் வாடிக்கையாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வாடிக்கையாளா்கள் கூறியதாவது:

    கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல் தவித்து வரும் நிலையில் மாதத் தவணையை கட்டுமாறு நிதி நிறுவனம் தொடா்ந்து வற்புறுத்தி வருகிறது. மேலும், ரிசா்வ் வங்கியின் அறிவுறுத்தலையும் மீறி தொடா்ந்து மாதத் தவணையை உடனடியாக செலுத்தக்கோரி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, ரிசா்வ் வங்கி அறிவிப்பின்படி அடுத்த 3 மாதங்களுக்கு தனியாா் நிதி நிறுவனத்தில் மாதத் தவணை கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai