உயா்மின் கோபுர விவகாரம்: 5ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 01st November 2020 11:44 PM | Last Updated : 01st November 2020 11:44 PM | அ+அ அ- |

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடா்ந்து 5ஆவது நாளாக கால்நடைகளுடன் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்துக்குளி அருகே உள்ள ரெட்டிபாளையம் பிரிவு பகுதியில் உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் போராட்டத்தை தொடா்ந்தனா்.
அப்போது அங்கு வந்து விவசாயிகளை சந்தித்த பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ‘கோரிக்கைகள் குறித்து உயா் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இருப்பினும் விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.