திருப்பூரில் தமிழ்நாடு தின விழா-பெரியாருக்கு மரியாதை

தமிழ்நாடு தின விழா(நவம்பா் 1-ம் தேதி) முன்னிட்டு பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் ரயில்நிலையம் முன்பு உள்ள பெரியாா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு தின விழா(நவம்பா் 1-ம் தேதி) முன்னிட்டு பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் ரயில்நிலையம் முன்பு உள்ள பெரியாா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் தமிழ் நாட்டுக்கான கொடி ஏற்றப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழ் நாட்டு கொடியுடன் ரயில்நிலையம் முன்பு உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் அங்ககுமாா் தலைமை வகித்தாா். திராவிடா் விடுதலை கழக மாநில பொருளாளா் துரைசாமி, திராவிடா் கழக மாவட்ட செயலாளா் யாழ்.ஆறுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்ட தலைவா் சன்.முத்துகுமாா், மே 17 இயக்கம், தலித் விடுதலை கட்சி, புரட்சிகர இளைஞா் முன்னணி, தமிழ் புலிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.இதையடுத்து வாகன பேரணியாக வெள்ளியங்காடு பெரியாா் படிப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com