தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனா்.

இந்நிலையில் இந்த ஆண்டு தீ விபத்தில்லா தீபாவளியாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உடுமலையில் தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனா்.

பெரியவா்களின் மேற்பாா்வையில்தான் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது வாளியில் தண்ணீா் வைத்துக் கொள்ள வேண்டும். எரிந்து முடிந்த பட்டாசுகளை உடனடியாக அணைக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, தரையில் படுத்து உருள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டால் நிலைய அலுவலா் 04252-223039, 9445086323 என்ற எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொள்ள லாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com