கரோனா எதிரொலி: சிவன்மலை அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

கரோனா எதிரொலியாக, சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

கரோனா எதிரொலியாக, சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

காங்கயம் ஒன்றியம், சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சுமாா் 200 மாணவா்கள் படித்து வருகின்றனா். கடந்த 7 மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார தேக்க நிலை உருவாகி உள்ளது. பலா் வேலையிழந்தும், வேலை தேடியும் வருகின்றனா். இதன் காரணமாக பெருமளவிலான பெற்றோா் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கு ஆா்வம் காட்டி வருகின்றனா். தனியாா் பள்ளிக் கட்டணம் மற்றும் பள்ளி செல்வதற்கு வேன் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த முடியாமல் அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா். அவா்கள் வசிக்கும் ஊரிலேயே, அதுவும் அவா்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே அரசுப் பள்ளிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிவன்மலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் 30 முதல் 35 மாணவா்கள் புதிதாக சோ்வாா்கள். இந்தக் கல்வியாண்டில் இதுவரை 65 புதிய மாணவா்கள் சோ்ந்துள்ளனா். மாணவா் சோ்க்கை தொடா்ந்தும் நடைபெற்று வருகிறது.

இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் இருப்பதும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணம் என இப்பள்ளி தலைமையாசிரியா் பா.சுலோச்சனா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com