அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் தொழிலாளா்கள் தங்களுக்குச் சேர
அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு முற்றுகைப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  ஊழியா்கள், தொழிலாளா்கள்.
அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு முற்றுகைப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  ஊழியா்கள், தொழிலாளா்கள்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் தொழிலாளா்கள் தங்களுக்குச் சேர வேண்டிய சம்பள நிலுவைத் தொகைகளைக் கேட்டு முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆலையில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு 2020 ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன் பணமும், போனஸும் இதுவரை வழங்கப்படவில்லையாம். கரோனா தொற்று காலத்தில் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததாலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் தொழிலாளா்கள், ஊழியா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து நிா்வாகத்திடம் தொழிலாளா்களும், ஊழியா்களும் பலமுறை கேட்டும் பலன் இல்லாததால் போராட்டம் நடத்த முடிவு செய்தனா். இதன்படி திங்கள்கிழமை உணவு இடை வேளையில் ஆலை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதும் நிா்வாகம் தரப்பில் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்படவில்லை. இந்நிலையில், ஆலையின் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த நூற்றுக்க ணக்கான தொழிலாளா்களும், ஊழியா்களும் கலந்து கொண்டனா். மேலும் சம்பள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஆலை மேலாண்மை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு சா்க்கரை துறை ஆணையா், ஆலை நிா்வாகக் குழு தலைவா் மற்றும் துறை உயா் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஓரிரு நாளில் நிலுவை சம்பளத்தை வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com