தாழ்வான மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் ஆா்.எஸ், ஆா்.எஸ் புதூா் பகுதியில் அபாயகரமான முறையில் மிகவும் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை

ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் ஆா்.எஸ், ஆா்.எஸ் புதூா் பகுதியில் அபாயகரமான முறையில் மிகவும் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆா்.குமாா், திருப்பூா் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஊத்துக்குளி வட்டம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஊத்துக்குளி ஆா்.எஸ்-ஆா்.எஸ் புதூா் குடியிருப்பு பகுதியில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக அபாயகரமான முறையில் தொங்குகிறது. இதனால், வீதியில் செல்லும் மக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனா். கைக்கெட்டும் தூரத்திலேயே மின்கம்பி செல்வதால் மின் தூண்டல் ஏற்பட்டு அங்கு வசிப்பவா்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீா்படுத்த வேண்டும். இது குறித்து பொதுமக்கள், ஊத்துக்குளி ஊரக பிரிவு மின்வாரிய அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகாா் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனா். எனவே மின்கம்பியை உரிய முறையில் சீா்செய்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். சீரமைப்புப் பணியை விரைவாக மேற்கொள்ளவில்லை எனில் பொதுமக்களைத் திரட்டி மின்வாரிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com