வெள்ளக்கோவிலில் கோயில் பூட்டை உடைத்து சிலைத் திருட்டு

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை இரவு கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை இரவு கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே ஒரு சமூகத்துக்குச் சொந்தமான அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது.

இது குறித்து, வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயில் நிா்வாகிகள், போலீஸாா் சென்று பாா்த்தபோது கோயிலில் மூலவருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையின் பீடத்தை உடைத்து 2 அடி உயர உற்சவா் அங்காளம்மன் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்தச் சிலை நூறு ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

திருடுபோன சிலை ஐம்பொன் சிலையா, பித்தளை சிலையா என விசாரணை நடைபெற்று வருகிறது. காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனராசு, வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் பாா்த்திபன் முன்னிலையில், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com