உற்பத்தி செலவுக்கேற்ப துணி விற்பனை விலை உயரவில்லை

உற்பத்தி செலவுக்கேற்ப துணி விற்பனை விலை உயராததால் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் வேதனை அடைந்துள்ளனா்.
நாடா இல்லாத விசைத்தறி.
நாடா இல்லாத விசைத்தறி.

உற்பத்தி செலவுக்கேற்ப துணி விற்பனை விலை உயராததால் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் வேதனை அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் நாடா இல்லாத விசைத்தறிகள் 10 ஆயிரம் உள்ளன. விசைத்தறி கூடத்தில் 4 தறிக்கு 2 போ் வீதம் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். ஒரு தறிக்கு 250 மீட்டா் துணி உற்பத்தியாகிறது. 10 ஆயிரம் தறிக்கு தினந்தோறும் 35 லட்சம் மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டா் துணி உற்பத்தி செய்ய ரூ. 30 செலவாகிறது. அதே சமயம் ஒரு மீட்டா் துணி விற்பனை விலை ரூ. 26 ஆக உள்ளது. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ. 4 வீதம் இழப்பு ஏற்படுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பணப்புழக்கம் குறைந்து பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால் துணி கொள்முதல் செய்ய வட மாநில ஜவுளி வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியைக் குறைத்த போதிலும் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இயங்கப்பட்ட விசைத்தறி கூடங்களில் 15 நாள் அளவுக்கு துணிகள் தேக்கம் அடைந்துள்ளன. உற்பத்தி செலவுக்கேற்ப துணி விற்பனை விலை உயராததால் விசைத்தறியாளா்கள் வேதனை அடைந்துள்ளனா். தொழிலாளா்களுக்கு சம்பளத்தின் அடிப்படையில்தான் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் வேலை இழப்பு ஏற்பட்டதால் போனஸ் தொகையும் குறைந்துள்ளது.

இது குறித்து நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளா் கரைப்புதூா் சி.ராஜேந்திரன் கூறியதாவது:

துணி உற்பத்தி செலவுக்கு ஏற்ப துணி விற்பனை விலை உயரவில்லை. விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயா்வு, நூல் ஒரு கிலோவுக்கு ரூ. 15 விலை உயா்ந்துள்ளது. கரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை. அதனால் துணி உற்பத்தி விலையைக் காட்டிலும் துணி விற்பனை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் கிடங்கில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.ஜி.எஸ்.டி. ரிட்டன்களை உடனே வழங்க வேண்டும். வங்கிகளில் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி செய்திட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com