காங்கயம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே பாலம் கட்டும் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காங்கயம் அருகே சாலையின் நடுவே பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, காங்கயத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம், செந்தாமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஜயன் (29) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

காங்கயம் - முத்தூா் சாலை பச்சாபாளையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலம் கட்டும் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து, லாரியின் முன்பக்கத்தில் மேல்பகுதியில் துளையிட்டு உள்ளே சென்று 2 மணிநேர போராட்டத்துக்குப் பின்னா் லாரிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநா் விஜயனை மீட்டனா். அவா் காயம் ஏதுமின்றி உயிா் தப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com