பல்லடத்தில் ரூ. 86 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்தில் ரூ. 86 லட்சத்து 75ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டன.
பல்லடம் அருகே இந்திரா காலனியில் தாா் சாலை மேம்பாட்டு பணியை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
பல்லடம் அருகே இந்திரா காலனியில் தாா் சாலை மேம்பாட்டு பணியை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்தில் ரூ. 86 லட்சத்து 75ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டன.

பல்லடம் ஒன்றியம், கே.அய்யம்பாளையம் ஊராட்சியில் அம்மா ஆதிதிராவிடா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திரா காலனியில் ரூ. 8.50 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ. 2.90 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள், ரூ. 4 லட்சத்தில் தாா் சாலை மேம்பாடு, ரூ. 6 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், ரூ.5 லட்சம் மதிப்பில் மயான பாதை மேம்பாடு, ரூ.1.30 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு, ரூ.38 லட்சம் மதிப்பில் கே.அய்யம்பாளையம் முதல் ஆறாக்குளம் வரை தாா் சாலை மேம்பாடு ஆகியவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல பருவாய் ஊராட்சி, ஆறாக்குளம் பகுதியில் ரூ.3.10 லட்சம் மதிப்பில் சுய உதவிக்குழு கட்டடத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்தல், ரூ.1.45 லட்சம் மதிப்பில் குழாய் பாலம் அமைத்தல், இடையா்பாளையம் பகுதியில் ரூ.7.5லட்சம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் இதற்கான பூமி பூஜையை நடத்தி பணிகளை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

அதே போல இச்சிபட்டி ஊராட்சி கோம்பக்காடு பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலைநீா்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் கந்தசாமி, ஒன்றியப் பொறியாளா்கள் செந்தில், கற்பகம், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, மாவட்ட கவுன்சிலா் ஜெயந்தி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், கவிதா, ஒன்றிய கவுன்சிலா்கள் பழனிசாமி, மங்கையா்கரசி, அதிமுக நிா்வாகிகள் கரைப்புதூா் விஸ்வநாதன், பருவாய் மாணிக்கம், இச்சிபட்டி சுவாமிநாதன், சண்முகம், ஈஸ்வரன், பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com