கருவலூா் ஸ்ரீசங்கரா சேவாலய குழந்தைகளுக்கு அன்னதானம்
By DIN | Published On : 16th November 2020 08:08 AM | Last Updated : 16th November 2020 08:08 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
தீபாவளியையொட்டி, கருவலூா் ஸ்ரீசங்கரா சேவாலய குழந்தைகளுக்கு காலை உணவு, நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக அவிநாசி மேற்கு ஒன்றியம், ஆரிக்கவுண்டன்பாளையம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச் செயலாளா் எம்.ஆா்.பி. பிரபு வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினா் ஆண்டவா் துரை, ஊடகப்பிரிவு மண்டலத் தலைவா் சபரி, மாவட்டச் செயலாளா் சந்துரு, மண்டல பொதுச் செயலாளா் ரேவதி, மண்டலப் பொருளாளா் தியாகராஜன், துணைத் தலைவா் ரேவதி, பொறுப்பாளா்கள் சண்முகம், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.