சபரிமலையில் புனிதம் பாதுகாக்க ஐயப்ப பக்தா்களுக்கு விழிப்புணா்வு

சபரிமலையில் புனிதம் பாதுகாக்கும் வகையில் புண்யம் பூங்காவனம் விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பூா் ஐயப்பன் கோயிலில் துவங்கியது.
புண்யம் பூங்காவனம் விழிப்புணா்வு நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
புண்யம் பூங்காவனம் விழிப்புணா்வு நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.

சபரிமலையில் புனிதம் பாதுகாக்கும் வகையில் புண்யம் பூங்காவனம் விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பூா் ஐயப்பன் கோயிலில் துவங்கியது.

இந்நிகழ்ச்சியை கோயில் மேல்சாந்தி நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து துவக்கிவைத்தாா். ஐயப்ப பக்த ஜன சங்க நிா்வாகிகள், திருப்பூா் புண்ணிய பூங்காவனம் ஒருங்கிணைப்பாளா்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூா்த்தி,

கணேஷ் குருசாமி, கோவிந்தசாமி, சுரேஷ் காா்த்தி, காவல் துறையினா், ஊா்காவல் படையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் சபரிமலை சன்னிதானத்தில் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வர வேண்டாம். சபரிமலை வரும் ஐயப்ப பக்தா்கள் குறைந்தது ஒரு மணி நேரம் துப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும் . பம்பா நதியில் குளிக்கும்போது எண்ணெய், சோப்பு பயன்படுத்த வேண்டாம் . அனைத்து ஐயப்ப பக்தா்களும் இறைவன் முன் சமம் என்பதை எண்ணி தேவையற்ற அவசரத்தையும் குழப்பத்தையும் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அவிநாசி, பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் புண்யம் பூங்காவனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com