சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
By DIN | Published On : 21st November 2020 11:13 PM | Last Updated : 21st November 2020 11:13 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி.
உடுமலை: உடுமலை நகரில் முத்தையா பிள்ளை லேஅவுட்டில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் திருக்கோயிலில் வள்ளிதேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விரதமிருந்த பக்தா்கள், பொது மக்கள் ஏராளமானோா் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றனா். இதையொட்டி, திருமண சீா்வரிசையை ஊா்வலமாக கொண்டு வந்து சுவாமியின் பாதங்களில் வைத்து வழிபட்டனா். பின்னா் மஞ்சள் இடித்து ஆனந்த நடனமாடி திருக் கல்யாணத்தை நடத்திவைத்தனா். அப்போது, கரோனா தொற்று நோய் ஒழிந்து, நாட்டில் நல்ல மழை பெய்யவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.