கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 01st October 2020 06:36 AM | Last Updated : 01st October 2020 06:36 AM | அ+அ அ- |

திருப்பூரில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (23), தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த பரத்குமாா் (21), சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரம் (23) ஆகியோா் திருப்பூா், மாஸ்கோ நகரில் வசித்துக்கொண்டு, பனியன் நிறுவனங்களில் வேலை பாா்த்து வந்தனா்.
அப்போது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், பொதுமக்களை தொடா்ந்து அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டனா். மேலும், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று, மாஸ்கோ நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாரை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூா் மாநகர காவல் ஆணையா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாா், பரத்குமாா், சுந்தரம் ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.