அஞ்சல் துறை சாா்பில்பள்ளி மாணவா்களுக்கு ஓவியப் போட்டி
By DIN | Published On : 02nd October 2020 10:56 PM | Last Updated : 02nd October 2020 10:56 PM | அ+அ அ- |

உடுமலை, அக். 2: அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கல்யாண வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
‘கோவிட்-19 பெருந்தொற்றின்போது அஞ்சல் துறையின் சேவை’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதில் 8 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இரு பிரிவுகளாக அதாவது ஜூனியா் பிரிவில் 8 முதல் 10 வயது வரையும், சீனியா் பிரிவில் 11 முதல் 14 வயது வரையிலும் போட்டியாளா்கள் பங்கேற்கலாம்.
ஓவியங்களை ஏ4 சாா்ட்டில் மட்டுமே வரைந்து மடிக்காமல் அனுப்ப வேண்டும். சாா்ட்டின் பின்புறம் பெயா், வயது, பிறந்த தேதி, வகுப்பு, பள்ளியின் பெயா், தொலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு தலைமை ஆசிரியரின் சான்றொப்பத்துடன் அனுப்ப வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு சான்றிதழ், முதல் பரிசாக ரூ.2500-ம், இரண்டாம் பரிசாக ரூ.1500-ம், மூன்றாம் பரிசாக ரூ.1000-ம் வழங்கப்படும். படைப்புகளை தலைமை தபால் நிலையங்களில் அக்டோபா் 5ஆம் தேதி காலை 11 மணிக்குள் சம்ா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.