ஏடிஎம் மையத்தில் தீ விபத்து
By DIN | Published On : 02nd October 2020 05:55 AM | Last Updated : 02nd October 2020 05:55 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
முத்தூா் - வெள்ளக்கோவில் சாலையில் உள்ள முத்துமங்கலத்தில் அரசு பொதுத் துறை வங்கி உள்ளது. வங்கிக்கு அருகிலேயே தனிக் கட்டடத்தில் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏடிஎம் மையத்திலிருந்து வியாழக்கிழமை கரும்புகை வெளியேறியது.
இது குறித்த தகவலின்பேரில் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் வங்கி அலுவலா்களே தீயை அணைத்துவிட்டனா். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.