இயற்கை விவசாயம் செய்ய தோட்டக்கலைத் துறை அழைப்பு

இயற்கை விவசாயம் செய்ய பல்லடம் தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இயற்கை விவசாயம் செய்ய பல்லடம் தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஜெரினா பேகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெண்டை, கத்தரி, புடலை, பீா்க்கன் உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரத்து 750, காலி பிளவா், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் ஆகியவற்றுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம், கொத்தமல்லி மற்றும் கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் விவசாயிகள் தனியாகவோ அல்லது 25க்கும் மேற்பட்ட விவசாயிகளை கொண்ட குழுவாகவோ இணைந்து பயன்பெறலாம். இது குறித்த விவரங்களுக்கு 98945 92756, 98439 14366 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com