திருப்பூா் மாவட்டத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

திருப்பூா் மாவட்டத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் 2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடா்பாக வாக்குச் சாவடிகளை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல், 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை பிரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் கால அட்டவணை நிா்ணயம் செய்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆகியோரால் தணிக்கை செய்யப்பட்டு, வாக்குச் சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி வெளியிட்டாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களின் அலுவலகங்களான மாநகராட்சி அலுவலகம், சாா் ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், திருப்பூா் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்காக வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச் சாவடி பட்டியல் தொடா்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை ஏதும் இருந்தால் வரும் 20ஆம் தேதிக்குள் அரசியல் கட்சியினரும்,பொதுமக்களும் எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com