தூய்மைப் பணியாளா்களை பாதுகாக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களை பாதுகாக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களை பாதுகாக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியினா் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு தனியாா் நிறுவனங்கள் முமுமையாக செயல்படத் தொடங்கியுள்ளன. பணியாளா்கள் பாதுகாப்புடன் இருக்க அரசும், நிறுவனங்களும் அறிவுறுத்துகின்றன. ஆனால் பல நிறுவனங்களில் ஊழியா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானோா் வீடு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனா். தூய்மைப் பணியாளா்கள் மூலம் நோய்த் தொற்று பரவல் பெருமளவு தடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா், சோப், கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகளும் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது இவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகூட சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை. சில உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் அலட்சியத்துடன் உள்ளனா்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com