தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு: பிற சங்கங்களுடன் ஆலோசனை

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக பிற உற்பத்தியாளா்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும்

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக பிற உற்பத்தியாளா்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று காரணமாக திருப்பூா் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் உற்பத்தியை நிறுத்தின. தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. எனவே, தீபாவளி பண்டிகைக்கு பின்னா் தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்கலாம் என தெரிவித்திருந்தோம்.

ஆனால், தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே காலதாமதம் ஆகிவிட்டதால் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா். எனவே, பிற உற்பத்தியாளா்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி தொழிற்சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com