கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ. 1.62 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 1.62 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 1.62 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசினாா்.

திருப்பூா், கல்லூரி சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல் விற்பனையைத் தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

வாடிக்கையாளா்கள் விரும்பும் வகையில் புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு அனைத்து கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் ரூ. 1.63 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புடன் கூடிய பட்டு பருத்திச் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், ஆடவருக்கான சட்டைகள், மகளிா் விரும்பும் சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் பருத்தி சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் அருள்ராஜன், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் பாபு, திருப்பூா் விற்பனை நிலைய மேலாளா் பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com