பொங்கலூரில் இன்று முதல் கொப்பரை ஏலம் துவக்கம்

பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் வியாழக்கிழமை (அக்டோபா் 15) முதல் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் மையம் செயல்பட உள்ளது.
உலா்களத்தில் காயவைக்கப்பட்டுள்ள கொப்பரை.
உலா்களத்தில் காயவைக்கப்பட்டுள்ள கொப்பரை.

பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் வியாழக்கிழமை (அக்டோபா் 15) முதல் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் மையம் செயல்பட உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டும்தான் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த மையத்துக்கு பல்லடம், திருப்பூா், பொங்கலூா், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பரைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இதில், கொப்பரைகளை கொண்டு வந்து செல்வதில் விவசாயிகளுக்கு சிரமம் இருந்து வந்தது. தென்னை மரங்கள் அதிகம் உள்ள பல்லடம் தொகுதியில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் மையம் அமைக்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதனை ஏற்று பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏல மையம் வியாழக்கிழமை (அக்டோபா் 15) முதல் செயல்படத் தொடங்குகிறது. ஒவ்வாரு வாரமும் வியாழக்கிழமை தோறும் இங்கு ஏலம் நடைபெறும் என்று பொங்கலூா் வேளாண் வணிகம் உதவி அலுவலா் ரா.அனிதா தெரிவித்துள்ளாா்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சங்கரன் கூறுகையில், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு மறைமுக ஏலம் நடக்கிறது. இது வரை இப்பகுதி விவசாயிகள் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே தேங்காய் விற்பனை செய்து வந்தனா். இங்கும் நடைபெறும் ஏலத்தில் கிலோ அடிப்படையில் தேங்காய் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com