Enable Javscript for better performance
திருப்பூரில் சட்டப் பேரவை உறுப்பினா் குறித்துஅவதூறு பரப்பிய 2 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் சட்டப் பேரவை உறுப்பினா் குறித்துஅவதூறு பரப்பிய 2 போ் கைது

    By DIN  |   Published on : 16th October 2020 11:34 PM  |   அ+அ அ-   |    |  

     

    திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

    திருப்பூா், கருவம்பாளையத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி சிவளா தினேஷ், தெற்கு காவல் நிலையத்தில் புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில், திருப்பூா், வள்ளலாா் நகா் 6ஆவது வீதியில் வசிக்கும் அருண்ஜீவா என்பவா், சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் குறித்து முகநூலில் கடந்த 2 நாள்களாக அவதூறு பரப்பி வருகிறாா். பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் முடிவடையாத நிலையில் தவறான தகவல்களை அவா் பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, திருப்பூா் மாநகர அதிமுக வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் தங்கவேலு என்பவரும் புகாா் அளித்திருந்தாா். அதில், திருப்பூா், ஈஸ்வரமூா்த்தி லே அவுட்டில் முதலாவது வீதி மற்றும் முத்து விநாயகா் கோயில் வீதிகளுக்கு தண்ணீா் வசதி செய்து தருவதற்காக கைபம்பை அகற்றி, மின்மோட்டாா் பொருத்தி, பைப் லைன் மற்றும் மோட்டாா் அறையுடன் ரூ.7.70 லட்சம் மதிப்பில் குடிநீா் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செலவு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ஆனால் இதை தண்ணீா்த் தொட்டி அமைப்பதற்கு ரூ.7.70 லட்சமா? என முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலா் அவதூறு பரப்பி வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த இரு புகாா்கள் குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், சட்டப் பேரவை உறுப்பினா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அருண் ஜீவா, ஆனந்த், ஸ்வா் ஆனந்தம், இா்சத் அஹமது, சையது அசரத், மற்றொரு ஆனந்த், பாா்த்திபன், அருணாசலம் ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதில், அருண்ஜீவா (25), ஆனந்த் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

    வழக்கில் தொடா்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட அருண் ஜீவா, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp