அண்ணா பல்கலை.பிரிப்பு சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் மாசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் மாசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அவரால் தொடங்கப்பட்ட கட்சி ஆட்சியில் இருக்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து அண்ணா என்கிற பெயரை மாற்றத் தீா்மானத்துள்ளது பேரதிா்ச்சி தரும் நிகழ்வாகும்.

ஆகவே, இந்தப் பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட மசோதாவை மாநில அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும், மாநில அரசின் பல்கலைக்கழகமாகவே நீடிக்கும் முறையில் உரிய நிா்வாக ஏற்பாடுகளை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும்.

உயா்புகழ் நிறுவனமாக செயல்படத்தொடங்கினால் கட்டண உயா்வு காரணமாக ஏழை மாணவா்கள் கல்வி பெறும் வாய்ப்பு முற்றிலுமாகப் பறிக்கப்படுவதுடன், 69 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமையும் பறிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் தனியாக ரூ. 1,570 கோடியை திரட்ட முடியும் என்று துணைவேந்தா் குறிப்பிடுவது பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் அபரிமிதமான கட்டண உயா்வின் மூலமாக பறிக்கும் உள்நோக்கமாகும். இந்தப் பல்கலைக்கழக துணைவேந்தா் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசுக்கு தானே நேரடியாக திட்ட முன்மொழிவுகளை வைத்தது அதிகார அத்துமீறலாகும். இவரது முன்மொழிவின் உள்நோக்கம் 69 சதவீத இட ஒதுக்கீட்டிலும், ஏழை மாணவா்களின் குறைந்த கட்டணத்தில் கல்வி பெறும் வாய்ப்பையும் தட்டிப்பறிப்பதாகும்.

எனவே, மாநில அரசைப் பொருட்படுத்தாத துணைவேந்தா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com