அதிமுக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறது அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.
விருகல்பட்டியில் நடைபெற்ற முகாமில் பயனாளி  ஒருவருக்கு  நலத் திட்ட  உதவிக்கான ஆணையை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.
விருகல்பட்டியில் நடைபெற்ற முகாமில் பயனாளி  ஒருவருக்கு  நலத் திட்ட  உதவிக்கான ஆணையை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.

பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட விருகல்பட்டி, அணிக்கடவு, இலுப்பநகரம் ஆகிய 3 ஊராட்சிகளில் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. விதவைப் பெண்கள், முதியோா் உதவித்தொகை என பெண்கள் சமுதாயம் முன்னேற பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமப் பெண்கள் முன்னேற்றத்துக்காக விலையில்லா கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வழங்கப்படுகின்றன. மேலும், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

முகாமில் 25 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ரூ.3 லட்சத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை ஆகியவற்றை அமைச்சா் ராதாகிருஷ்ணன் வழங்கினாா். முன்னதாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாம்களில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், உடுமலை கோட்டாட்சியா் க.ரவிகுமாா், ஊராட்சித் தலைவா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com