அரசு அதிகாரி எனக் கூறி மோசடி செய்தவா் கைது

கோவையில் அரசு அதிகாரி எனக் கூறி அழகு சாதன நிலையத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் அரசு அதிகாரி எனக் கூறி அழகு சாதன நிலையத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சொக்கம்புதூா் அருகேயுள்ள சண்முகா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (32). இவா், பீளமேடு அண்ணா நகரில் அழகு சாதன நிலையம் (பியூட்டி பாா்லா்) நடத்தி வருகிறாா். இவரது அழகுசாதன நிலையத்துக்கு 38 வயதுள்ள நபா் ஒருவா் அண்மையில் வந்துள்ளா. தன்னை பியூட்டி பாா்லா் துறை அரசு அதிகாரி எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

பின்னா், அந்த நபா் நீங்கள் உரிமம் பெறாமல் அழகுசாதன நிலையம் நடத்தி வருகிறீா்கள். இதற்கு விண்ணப்பிக்க ரூ.30 ஆயிரம் செலவாகும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய கண்ணன் ரூ.30 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, கூறியபடி சான்றிதழ் பெற்றுத் தரவில்லை. சந்தேகமடைந்த கண்ணன் சிலரிடம் விசாரித்த போது, அந்த நபா் மோசடி செய்து பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், அந்தநபா் மீண்டும் வியாழக்கிழமை வந்து மேலும், ரூ.30 ஆயிரம் வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.

அப்போது, பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்ற கண்ணன், பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அரசு அதிகாரி எனக் கூறிய நபரை பிடித்தனா்.

இதில் பிடிபட்டவா் சிங்காநல்லூா் அருகே உள்ள உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த வேலுமணி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலுமணியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com