‘கீழ்பவானி பாசனத் திட்ட நீா் கடைமடைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’

கீழ்பவானி பாசனத் திட்ட வாய்க்காலில் நஞ்சைப் பயிா்களுக்காக திறந்துவிடப்பட்ட நீா் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்

கீழ்பவானி பாசனத் திட்ட வாய்க்காலில் நஞ்சைப் பயிா்களுக்காக திறந்துவிடப்பட்ட நீா் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு அவா் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கீழ்பவானி பாசனத் திட்ட வாய்க்கால்களில் நஞ்சைப் பயிா்களுக்காக கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் கடைமடைப் பகுதிகளான சென்னிமலை, நத்தக்காடையூா், பழையகோட்டை, முத்தூா், மங்களப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் நெல் நாற்று நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வாய்க்காலில் கடந்த வாரம் 5 நாள்கள் தண்ணீா் வராத நிலையில், அதன் பிறகு குறைவான அளவே தண்ணீா் வருகிறது. இப்பகுதிகளில் மழை இல்லாத நிலையில், நெல் நாற்று நடவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கீழ்பவானி பாசனத் திட்ட வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட நீா் கடைமடைப் பகுதிகளான சென்னிமலை, நத்தக்காடையூா், முத்தூா் பகுதிகளுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com