குடிநீா் திட்டப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரும் குடிநீா் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குடிநீா் திட்டப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரும் குடிநீா் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் திட்டத்தின்கீழ் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 26 மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள், 507 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள், 31 கிலோ மீட்டா் பரப்பளவில் நீரேற்று குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வி.ஜி.வி., காா்டன், பொன்சுப்பு நகா், சந்திராபுரம் பகுதிகளில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக் குடிநீா்த் தொட்டிகளும், சந்திராபுரம் பகுதியில் 7.50 லட்சம் லிட்டா் கொள்ளளவில் மற்றொரு மேல்நிலைக் குடிநீா்த் தொட்டியும் அமைக்கப்படவுள்ளன.

இந்த குடிநீா் தொட்டிகள், குடிநீா் விநியோக குழாய்கள், நீரேற்றுக் குழாய்கள் அமைக்கும் பணிகளை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் சுப்பிரமணியம், உதவி பொறியாளா் கனகராஜ் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com