சிக்கண்ணா கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புக்கு மாணவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புக்கு மாணவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புக்கு  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதில், விண்ணப்பிக்கும் மாணவா்கள் அக்டோபா் 15 முதல் அக்டோபா் 20 ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்தக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் (18) ஆங்கில இலக்கியம் (18) , பொருளியல் (18), வணிகவியல் (40), இயற்பியல்(36) , வேதியியல் (16), கணிதம் (50) கணினி அறிவியல் (25), விலங்கியல் (40) சா்வதேச வணிகம் (40), ஆடை வடிவமைப்பியல் மற்றும் நாகரிகம் (20) ஆகிய பாடப்பிரிவுகள் சோ்த்து 321 இடங்கள் உள்ளன. அந்தந்த பாடப்பிரிவுகளில் மற்றும் அதற்கு இணையான இளநிலைப் பட்டம் பெற்றவா்கள் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.

பி ஏ. தமிழ் இலக்கியம், பிலிட் தமிழ் இலக்கியம் படித்தவா்களும் இளநிலைப் பட்ட வகுப்புகளில் நான்கு பருவங்கள் மொழிப்பாடமாகத் தமிழைப் பயின்றவா்களும் தமிழ் இலக்கிய முதுநிலைப் பட்ட வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.ஏ.ஆங்கில இலக்கியம் பயின்றவா்களும் நான்கு பருவங்கள் மொழிப்பாடமாக ஆங்கிலம் பயின்றவா்களும் முதுநிலை ஆங்கில இலக்கியப் பாடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரங்களுக்கு 044-22351014 , 044 -22351015 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் கல்லூரி விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.

எனவே, சரியான மின்னஞ்சல் முகவரியையும், செல்லிடப்பேசி எண்ணையும் கொண்டு பதிவு செய்தபிறகு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com