விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற்று வந்தது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மாா்ச் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமும் ஏப்ரல் முதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.

கூட்டத்தில், இணை இயக்குநா் (வேளாண்மை) மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், உதவி இயக்குநா் (தோட்டக் கலைத் துறை) பிரேமா, துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com