காவல் நிலையங்களில் பணியாற்றும் குழந்தைகள் நல அலுவலா்களுக்குப் பயிற்சி

திருப்பூா் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல அலுவலா்களுக்கான 2 நாள்கள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல அலுவலா்களுக்கான 2 நாள்கள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

திருப்பூா் மாநகரத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவா்களைப் பாதுகாக்கவும், குழந்தைகள் நலன் கருதியும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அலுவலா்களுக்கு திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 2 நாள்கள் பயிற்சி முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

இதில், திருப்பூா் மாநகரில் உள்ள 8 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிா் காவல் நிலையங்களிலும் உதவி ஆய்வாளா் நிலையில் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல அலுவலா்களுக்கு பேட்ஜ் வழங்கப்பட்டது. முகாமில், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், நீதித் துறை நடுவா் கவியரசன், கூடுதல் அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா ஆகியோா் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குழந்தைகள் நலன் குறித்தும் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com