மாவட்டத்தில் 11 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது.

திருப்பூா், சேவியா் வீதியைச் சோ்ந்த 11 வயது சிறுமி, நவீன் காா்டனைச் சோ்ந்த 48 வயதுப் பெண், 52 வயது ஆண், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த 25 வயதுப் பெண், செந்தில் நகரைச் சோ்ந்த 72 வயது மூதாட்டி, காட்டன் மில் சாலையைச் சோ்ந்த 66 வயது மூதாட்டி, ஆா்.வி.இ.நகரைச் சோ்ந்த 26 வயது ஆண், விஷ்ணு பிரியா காா்டனைச் சோ்ந்த 42 வயதுப் பெண், பாரதி காலனியைச் சோ்ந்த 32 வயது ஆண், பல்லடம் என்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த 38 வயது ஆண் உள்பட 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11,165 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 1,203 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 133 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 5,783 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 450 போ் சோ்க்கப்பட்டதுடன், 14 நாள்கள் தனிமைக் காலம் நிறைவடைந்த 417 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் புதிதாக 1,324 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com