துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு காங்கயத்தைச் சேர்ந்தவர் தேர்வு

அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கயத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கயத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கயத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கயம்: அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கயத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தைச் சேர்ந்தவர் லட்மணன் என்ற லட்சுமணகாந்தன். 47 வயதான இவர், தனது 5 வயதில் இளம்பிள்ளைவாதம் நோய் தாக்கியதில் இடது கை மற்றும் இடது கால் பாதிப்படைந்தவர். திருமணமான இவருக்கு நவீன் பாலாஜி (20) என்ற கல்லூரிப் படிப்பை முடித்த மகன் உள்ளார். மனைவி காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

லட்சுமணகாந்தனுக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத காதல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் ஆர்வத்துடன் பார்க்கச் சென்றுவிடுவார். மேலும் கிரிக்கெட் விளையாடியும் வருகிறார். இவருடைய மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க தனி நபர்களின் பங்களிப்போடு காங்கயத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து, மகனுக்கும் மற்ற கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் பயிற்சியளிப்பதோடு, மற்ற நார்மலான வீரர்களுடன் மாற்றுத்திறனாளியான லட்சுமண காந்தனும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதனைக் கண்ட அரியலூர் கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கடேஷ் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், வரும் நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடுவதற்கு கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு, தேர்வாகியுள்ளார். இதன் மூலம், துபாயில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என 5 அணிகள் விளையாடவுள்ள இப்போட்டிகளில், தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்காக லட்சுமணகாந்தன் விளையாடவுள்ளார்.

இது குறித்து லட்சுமணகாந்தன் கூறியபோது, எனது மகனுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு  வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நிலையில், தனக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்துவேன், எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் துபாய் சென்று விளையாடவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இவருக்கு தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என இப்பகுதி கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com