பாறைக்குழியில் சாம்பல் கழிவுகளைக் கொட்டுவதற்கு தடைவிதிக்கக் கோரிக்கை

காங்கயம் அருகே படியாண்டிபாளையம் பகுதியில் பாறைக்குழியில் ஆலைக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என காங்கயம் வட்டாட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் அருகே பாறைக்குழியில் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளித்த படியாண்டிபாளையம் பகுதி மக்கள்.

இது குறித்து எஸ்.திருமூா்த்தி மற்றும் அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டம், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட படியாண்டிபாளையம் பகுதியில் தனியாா் அரிசி ஆலைக்குச் சொந்தமான பாறைக்குழியில் அரிசி ஆலைக் கழிவுகள் மற்றும் சூடான சாம்பலை கொட்டி வருகின்றனா். இதனால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து, இங்குள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளில் நீா் மட்டம் குறைந்து வருகிறது.

இந்த பாறைக்குழியில் முறைகேடாக, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, கனிம வளத்தை விற்றுள்ளனா். இதனை மறைக்கவே பாறைக்குழியில் அரிசி ஆலைக் கழிவுகளையும், நெருப்புடன் கூடிய சாம்பலையும் கொட்டி வருகின்றனா். எனவே, பாறைக்குழியில் ஆலைக் கழிவுகளைக் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com