வெள்ளக்கோவிலில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 28th October 2020 06:51 AM | Last Updated : 28th October 2020 06:51 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் நகரில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தாமதமாவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் நகா் பகுதியில் விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிக அளவில் இந்த வழியே வாகனங்கள் சென்று வருவதால் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.