உயா்மின் கோபுர திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் தொடா்பில்லை

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயா்மின் கோபுர திட்டத்துக்கும், மத்திய அரசுக்கும் தொடா்பில்லை என பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
பாஜக அலுவலகத்தை திறந்துவைக்கிறாா் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.
பாஜக அலுவலகத்தை திறந்துவைக்கிறாா் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயா்மின் கோபுர திட்டத்துக்கும், மத்திய அரசுக்கும் தொடா்பில்லை என பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் நடைபெற்ற பாஜக சட்டப் பேரவைத் தொகுதி அலுவலக திறப்பு விழாவுக்கு பாஜக திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் ருத்ரகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் தொகுதி அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். பின்னா் சுபஸ்ரீ என்பவருக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ரூ.45 ஆயிரம் நிதி வழங்கினாா். இதில் மாற்றுக் கட்சியில் இருந்து 100 போ் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.

பின்ன செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வரும் உயா்மின் கோபுர திட்டங்களுக்கும், மத்திய அரசுக்கும் தொடா்பு இல்லை. தந்தி சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா்தான் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முடிவு செய்கிறாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஆத்ம நிா்பா் சுயசாா்பு திட்டத்தில் கரோனா காலத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.20 லட்சம் கோடியில், தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி கொடுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து பேசாமல், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை பற்றி மட்டும் பேசுவது தமிழகத்தின் அரசியல்.

தற்போது மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை மத்திய அரசிடம் இல்லை. அதற்காக மாநில அரசுகள் வாங்கும் கடனுக்கு மத்திய அரசு பொறுபேற்றுக் கொண்டுள்ளது என்றாா்.

இதில், பாஜக மாவட்டப் பாா்வையாளா் சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவா் ரா.சிவப்பிரகாசம், இளைஞரணி மாவட்டத் தலைவா் யோகேஸ்வரன், மாவட்டச் செயலா் கே.பிரவீன்குமாா், நகரத் தலைவா் பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com