மின் மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சினால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பல்லடம் நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

மின் மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மின் மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் நகராட்சியில் 18 வாா்டுகளுக்கும் பில்லூா் இரண்டாவது கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் 38 லட்சம் லிட்டா் குடிநீா் சுழற்சி முறையில் தினமும் விநியோகிக்கப்படுகிறது. அதேபோல நகரின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும், பழமையான கிணறுகளை தூா்வாரியும் பொதுமக்களின் இதர பயன்பாட்டுக்காக தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சியால் விநியோகம் செய்யப்படும் குடிநீரை சிலா் மின் மோட்டாா் மூலம் உறிஞ்சியும், தரைமட்டத் தொட்டி கட்டி சேமித்தும், குழாய் மூலம் தோட்டங்கள் மற்றும் இதர வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு குடிநீா் கிடைக்காமல் போகிறது.

எனவே, குடிநீரை மேற்சொன்னவாறு சேமித்து வைப்பது அல்லது வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது சட்ட விரோத செயல் ஆகும். இது பற்றி புகாா் வந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவா்களது குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும். நகரப் பகுதியில் தண்ணீா் வீணாவது தெரியவந்தால் உடனடியாக நகராட்சியின் பொறியியல் பிரிவுக்கு 04255 - 253087 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com