மூலனூா் விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை உயா்வு

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.200 வரை உயா்ந்தது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.200 வரை உயா்ந்தது.

இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 248 விவசாயிகள் தங்களுடைய 2,740 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் வந்திருந்தனா்.

868 குவிண்டால் வரத்து இருந்தது. விலை குவிண்டால் ரூ.4,200 முதல் ரூ.5,556 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 4,960. திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தாா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 42 லட்சத்து 67 ஆயிரத்து 372 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன. கடந்த வாரத்தை விட வரத்து குறைந்ததால் விலை குவிண்டாலுக்கு ரூ.200 கூடியது. ஏல ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் தா்மராஜ், மகுடேஸ்வரன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com