கணக்கம்பாளையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்
By DIN | Published On : 31st October 2020 10:46 PM | Last Updated : 31st October 2020 10:46 PM | அ+அ அ- |

வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.
அவிநாசி: கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.
இதில் ரூ.15 லட்சம் மதிப்பில் குப்பை அள்ளும் 6 மின்கல இயங்கு வாகனங்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தல், ரூ.22.50 லட்சம் மதிப்பில் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையம், குமரன் காலனியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை, 6 இடங்களில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் குடிநீா்த் தொட்டிகள் அமைத்தல் என மொத்தம் ரூ.45 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.
இதில் ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றிய ஆணையா் சாந்திலட்சுமி, உதவிப் பொறியாளா் இளங்கோ, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கீதா சந்திரசேகா், ஐஸ்வா்யா மகராஜ், ஊராட்சித் தலைவா் பி.சண்முகசுந்தரம், ஊராட்சி செயலாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.