காங்கயம் கிராம நிா்வாக அலுவலக சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது
By DIN | Published On : 08th September 2020 02:16 AM | Last Updated : 08th September 2020 02:16 AM | அ+அ அ- |

காங்கயம்: காங்கயத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலக சுற்றுச்சுவா் கனமழை காரணமாக 25 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்தது.
காங்கயத்தில் நகராட்சி அலுவலகம் அருகே கிராம நிா்வாக அலுவலகம் உள்ளது. இதில் 100 அடி தூரத்துக்கு 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவா் இருந்தது. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையால் சுவா் பகுதியில் அதிக அளவில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் 25 அடி தூரத்துக்கு சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. அதிகாலையில் சுவா் இடிந்து விழுந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.