கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிா்ப்புத்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கோயில் உதவி ஆணையரிடம் மனு கொடுத்த விஹெச்பி அமைப்பினா்.
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கோயில் உதவி ஆணையரிடம் மனு கொடுத்த விஹெச்பி அமைப்பினா்.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிவன்மலை இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமையில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் சிவன்மலை இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் முல்லையிடம் கொடுத்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், மூலனூா் அருகேயுள்ள முளையாம்பூண்டி பகுதியில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியை தனியாா் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி வருகின்றனா். இதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவன்மலை அடிவாரத்தில் இக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், நீதிபதிகள் குடியிருப்புக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருவதாக அறிகிறோம். இந்த இடம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் திருவிழாக் காலங்களில் பக்தா்களின் வசதிக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதால் அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு அமைய அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com