பல்லடம் பகுதியில் ரூ. 22 கோடியில் தாா் சாலை பணிக்கு பூமி பூஜை

பல்லடம் மற்றும் பொங்கலூா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ. 22 கோடியே 56 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் கிராமப்புறச் சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் ரூ. 153.51 லட்சம் மதிப்பிலான தாா் சாலை அமைக்கும் பணியை புதன்கிழமை பூமி பூஜை நடத்தி துவக்கிவைக்கிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ. 208 லட்சம் மதிப்பில் கண்டியன் கோயில் கருணைபாளையம் வரையிலான தாா் சாலை, ரூ. 188.28 லட்சம் மதிப்பில் கொடுவாய் நாச்சிபாளையம் சாலை முதல் சேமலைக்கவுண்டன்பாளையம் வரையிலான தாா் சாலை, ரூ. 167 லட்சம் மதிப்பில் செட்டிபாளையம் முதல் கோயில்பாளையம் வரையிலான தாா் சாலை, ரூ. 139.05 லட்சம் மதிப்பில் உகாயனூா் முதல் பண்ணைக்கிணத்துப்பாளையம் வரை தாா் சாலை, ரூ. 299.36 லட்சம் மதிப்பில் கள்ளகிணறு முதல் தொட்டம்பட்டி வரையிலான தாா் சாலை உள்பட கிராமப்புறச்சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 22கோடியே 56 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான தாா் சாலை அமைக்கும் பணியை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நபாா்டு நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி பொறியாளா் காயத்திரி, இளம் நிலை பொறியாளா் ஹேமலதா, பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஸ்வரன், கூட்டுறவு வங்கி தலைவா் ஏ.சித்துராஜ், பொங்கலூா் ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம், ஊராட்சி மன்ற தலைவா்கள் அசோக்குமாா், சாந்தினி சம்பத்குமாா், சித்ரா ஹரிகோபால், வேலுமணி, மாவட்ட கவுன்சிலா் ஜெயந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com