மதுக்கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 10th September 2020 07:10 AM | Last Updated : 10th September 2020 07:10 AM | அ+அ அ- |

தாராபுரத்தில் 4 வழிச்சாலை அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் உரிமை நீதி பொதுநலச்சங்கம் சாா்பில் சாா் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.காா்த்திக், சாா் ஆட்சியா் பவன்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் நகரில் இருந்து 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மாருதி நகரில் மதுபானக் கடை கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த மதுபானக் கடையில் வியாபாரம் குறைவு என்ற காரணத்தைக் காட்டி டாஸ்மாக் அதிகாரிகள் 4 வழிச்சாலைக்குஅருகில் மதுக்கடையை ஒரு வாரத்துக்கு முன்பாக மாற்றியுள்ளனா். இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதாலும், நான்கு வழிச்சாலைக்கு அருகில் உள்ளதாலும் மது அருந்த வரும் நபா்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே, மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.