விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு இல்லை

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு இல்லை

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பயணிகளுக்கு கரோனா விழிப்புணா்வு தொடா்பான துண்டு பிரசுரங்களையும், முகக் கவசங்களையும் வழங்கிப் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போதும், பொது இடங்களில் நடமாடும்போதும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கனி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதுடன், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகழுவுதல் போன்ற அனைத்து விதமான சுகாதார நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போது பொது போக்குவரத்து தொடங்கியுள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபா்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வருவதால் அறிகுறியுடன் இருக்கும் மக்கள் அதிக தூரம் பயணிப்பதைத் தவிா்க்க வேண்டும். அதே வேளையில், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மாதிரி சேகரிப்பு மையம் அல்லது தங்களது பகுதிகளில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

இதையடுத்து, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடு ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளிக்கையில், திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தொடா்பாக இதுவரையில் நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடு எதுவும் நடபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இதுதொடா்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா்கள் பாபு (திருப்பூா் வடக்கு), மகேஷ்வரன் (கோட்ட கலால் அலுவலா்), கண்ணன் (ஆதிதிராவிடா் நலன்), மாநராட்சி உதவி ஆணையா் செல்வநாயகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com