வெள்ளக்கோவிலில் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 10th September 2020 07:07 AM | Last Updated : 10th September 2020 07:07 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் கடைவீதிப் பகுதியில் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தற்போது வெள்ளக்கோவில் கடைவீதிப் பகுதியில் கரூா் தேசிய நெடுஞ்சாலை இரட்டைக்கிணற்றில் இருந்து சேனாபதிபாளையம் பிரிவு வரை இரண்டு கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நான்கு இடங்களில் தரைப்பாலம் கட்டப்படுகிறது.
இந்நிலையில் மழையும் பெய்ததால் வாகனங்கள் விரைவாகச் செல்ல முடியாமல் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக புதன்கிழமை போக்குவரத்து ஸ்தம்பித்தது.